வியாழன், 12 நவம்பர், 2015

செம்பரம்பாக்கம் ஏரி : நண்பன்-- தோழன் - சோகம் - மகிழ்ச்சி - விளையாட்டு - மரணமுமாக..அனைத்துமாக..























3 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பின் படி வற்றாத ஜீவ நதிகள் ஏதும் இங்கு பாயவில்லை. அத்துடன் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் தமிழ்நாட்டில் சேமிக்கப் படுவதில்லை. மழை நீர் 26 % அளவிற்கு பூமியில் ஊறினால்தான் நிலத்தடி நீர் ஊறும். இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்து பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரி அமைப்பை 2000 ஆண்டுகளுக்கு மேலாகப் படிப்படியாக உருவாக்கினார்கள். நம் முன்னோர்கள்.
    தமிழ்நாட்டின், தமிழக மக்களின், நமது முன்னோர்களின் பெருமைகள், பாரம்பரியம் என்பது கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்பதல்ல.. மாறாக மனித நாகரிக வளர்ச்சிக்கான அவசியமான சூழல் கட்டமைப்புகள், நுண்ணிய பொறியமைப்புகளை தங்கள் உழைப்பு திறனால், அறிவு நுட்பத்தால், அனுபவ நடைமுறையால் கண்டறிந்ததுதான்.. மருத்துவம், கட்டிடம், விவசாயம், கால்நடை, நீரியல், கடல்மீன்வளம்..என்று பலப்பல துறைகளில்அறிவார்ந்த நுண்ணிய பொறியமைப்புகளாக இவைகள் நம்முன் விரிந்து குவிந்து உள்ளன. இதில் தலையானது ஆறுகள், ஏரிகள், இணைப்பு கால்வாய்கள், வடிகால்கள், குளங்கள், குட்டைகள் என்று பலவாறான நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பொறியமைப்புகள்தான். இது உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்தாலும் தமிழ்நாட்டின் இந்த நுட்பமான அமைப்பு உலகத்திற்கே நேர்த்தியான முன்மாதிரியாக இருகின்றது என்று பல நீரியல் வல்லூனர்கள் எடுத்துரைக்கின்றனர். இந்த அமைப்புதான் மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையை முழுமையாக தேக்கி வைத்து பயன்படுத்தியது. இதுதான் இன்றைய நிலத்தடி நீரின் ஆதாரமாகவும் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. செம்பரம்பாக்கம் ஏரியின் பிரதான கால்வாயான மாங்காடு கால்வாயின் இணைப்பின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் போருர் இரட்டை ஏரிக்கு வருகிறது. இந்த போருர் இரட்டை ஏரி நிரம்பினால் கலங்கு மூலம் நீர் வளசரவாக்கம் ஏரிக்கு ..பின் இராமபுரம் ஏரிக்கு செல்லும்படி இணைப்பு கால்வாய்களை நமது முன்னோர்கள் வடிவமைத்து இருந்தனர். கோயில் குளங்கள், குட்டைகளும் இதில் அடக்கம். இந்த வலைப்பின்னல் நீரியல் முறையினால் பரந்து விரிந்த தென்சென்னை பகுதி முழுவதும் நன்னீர் நிலத்தடி நீர்வளம் மிகுந்ததாக இருந்தது. ஆனால் கருணாநிதி ஆட்சி காலத்தில் திமுக அரசியல்வாதிகளால்,உள்ளூர் தலைவர்களால் படிப்படியாக வளசரவாக்கம் ஏரி, இராமபுரம் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா போட்டு விற்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. விதை நெல்லை விற்றுத் தின்றவனின் இரவு விடியாது’ என்பார்கள் நம் முன்னோர்கள். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள கரிய இருள் இயற்கை வளங்களை சூறையாடும் இந்த புல்லூறவு-சூறையாடும் முதலாளியம்( CHRONY CAPATILISAM) . ஆனால்..சிலர்,மழை பெய்தால் இந்தநிலை சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். சரியானாலும் கூட அது மிகமிகத் தற்காலிகமானதே. ஏனெனில், மழைநீரைச் சேமிக்கும் நீர்ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், பெய்யும் மழை நீரை எதில் சேமித்துவைப்பது? பெய்யும் மழைநீரில் 26 சதவிகித நீராவது நிலத்துக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் சரியான மட்டத்தில் பராமரிக்கப்படும். ஆனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில், காஞ்சிரவரம்- திருவள்ளுவர் மாவட்டங்களில் இன்று 8 சதவிகிதநீர் கூட நிலத்தடிக்குச் செல்வதில்லை. அந்த அளவுக்கு ஏரிகள், இணைப்பு கால்வாய்கள், குளங்கள், நிலம் நாசமாக்கப்பட்டுள்ளன.
    ஆனால், தண்ணீர்வியாபாரிகளுக்கு மட்டும்எங்குஇருந்துதண்ணீர்கிடைக்கிறது? அவர்கள், நகரத்தின் புறநகர்ப்பகுதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சிஎடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை இடைவிடாமல் உறிஞ்சப்படும் போது, அதுவும் ஒருநாள்தீர்ந்துபோகும். அந்த ‘ஒருநாள்’ நூற்றாண்டுகளுக்குப் பின்வரப்போவது இல்லை. நம் காலத்திலேயே மிகவிரைவில் வந்துவிடலாம். அந்தச்சமயத்தில் தண்ணீர் மேலும் விலைமதிப்பற்ற செல்வமாகமாறும். கேன் தண்ணீர் வாங்கவும், லாரி தண்ணீர் பெறவும் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலைவரலாம். குண்டி கழுவாமல் காகிகத்தால் துடைக்கும் நிலைக்கு தள்ளபடலாம்.

    பதிலளிநீக்கு