வியாழன், 24 ஜனவரி, 2013

செம்பரம்பாக்கம் ஏரி பறவைகள் ( BIRDS OF CHEMBARMBAKKAM LAKE)

வால் காக்கை (Rufous Treepie அல்லது Dendrocitta vagabunda)  இது அரிகாடை , முக்குறுணி , மாம்பழத்தான் குருவி , கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்..  நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள். வேளாண் இடங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும் இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda).காக்கையைப் போன்ற அலகு, கருந்தலை, மஞ்சட்பழுப்பு (சிவலை) நிறவுடல், வெள்ளைப் பட்டைகளுள்ள இறக்கை, கருமுனை கொண்ட சாம்பல் நிற வால் உடைய பறவை


அக்கக்கா குருவி


நீலத் தாழைக்கோழி கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது ஏரிக்கரைகள் போன்ற ஈரமான நிலங்களில் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இணையுடனும் கூட்டமாகவும் வாழ்கின்றன. இவை பொதுவாக நீலநிறத்தில் இருக்கும். இவற்றில் 13 வகையான சிற்றினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை ஓரளவு பறக்கும். இவற்றிற்கு விரலிடைச் சவ்வுகள் இல்லை எனினும் நன்றாக நீந்தக் கூடியது.






அடப்பான்

குயில்

குருட்டுக் கொக்கு

வானம்பாடி

தவிட்டுக் குருவி


அடப்பான்



பச்சைப் பஞ்சுருட்டான் (Merops orientalis)  அல்லது பச்சை ஈப்பிடிப்பான் (Green Bee-eater) என்படும். ஒல்லியான உடல் வாகைக்கொண்ட இது ஒரு வலசை வாராப்பறவை.சீரான ஒரு கருப்பு கோடு அலகின் பின்புறமிருந்து தலையின் பின்புறம் வரை கண்கள் வழியாக செல்ல கண்கள் சிவந்து இருக்கும். கால்கள் சத்தின்றியும், விரல்கள் குட்டையாகவும் அடியில் செர்ந்தும் இருக்கும்

சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

குருட்டுக் கொக்கு