திங்கள், 18 மார்ச், 2013

உலக சிட்டுக்குருவிகள் நாள்: மார்ச்:20 (MARCH 20: WORLD SPARROW DAY)

நாம் வாழும் பேரண்டத்தில் உயிர்கள் வாழத்தகுதியாக இருப்பது இந்த பூமித்தான்! பேராசைப் பிடித்த கார்ப்பிரேட் முதலாளியம் இந்த பூமியை  பல்வேறு மாசுகளால் நாசப்படுத்தி அழித்து வருகின்றது. சிட்டுகுருவி ஒர் இடத்தில் இல்லையெனில் அங்கு சுற்றுப்புறச்சூழல் கேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பொருள். பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட உயிர் என்ற அடிப்படையில் மனித இனம் எல்லா உயிர்களும் அதனதன் இடத்தில் வாழும் உயிர்ச்சக்கரத்தினைப் பாதுகாப்பது கடமை. மனித குலத்திற்கு அதனை நினைவூட்டவே இந்த மார்ச் 20

சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்


சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்[




சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அன்னியப்பெரு நிறுவனங்களும், அன்னாந்துபார்க்கும் மால்களும், அந்நிய முதலீடுகளும் எங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல இந்த சின்னஞ்சிறு பறவைகளையும் காண்பதற்க்கரிதாய் செய்துவிட்டதே! என்ன செய்ய?
 நான் பதிவு செய்த சிட்டுக்குருவிகள்!

பலசரக்குக்கடைகள் - இப்பெயர் இன்னும் கொஞ்ச நாட்களில் வழக்கொழிந்துவிடலாம். மால்களும், சூப்பர் ஸ்டோர்களும் பெருகியவண்ணம் இருக்கிறது. முன்புபோல பொட்டணம் மடித்துப்போடுவதில்லை. அரிசியாய் இருந்தாலும், பருப்பாய் இருந்தாலும் காற்றுப்புகா பிளாஸ்டிக் பைகளில் அடைத்த பிறகே விற்பனைக்கு வருகின்றன. பெரும்பாலும் கடினமான பிளாஸ்டிக் பைகளில் வருவதால் சிந்துவதற்கும் வாய்ப்பில்லை.
முன்பெல்லாம் அனைத்துப்பொருட்களுமே சாக்குகளில் தான். தானியங்கள் மற்றும் பிற உணவுப்பொருட்கள் சிந்தும். இதை உண்பதற்காகவே பறவைகள் இம்மாதிரி பலசரக்குக் கடைகளை வட்டமிடும். குறிப்பாக சிட்டுக்குருவிகள். சுலகுகளில் புடைக்கப்பட்டபின் மீதி தானியங்கள் இவைகளுக்குத்தான். சரளமாய் கீழமாசி வீதிகளில் வளைய வந்த சிட்டுக்குருவிகளைக் காணவில்லை. வாழிடங்களான ஓட்டு வீடுகளும் காணாமல் போய்விட்டன.


அடுத்த தலைமுறைகளுக்கு.........
ஏ குருவி சிட்டுக்குருவி....! பாடலை எப்படி அறிமுகப்படுத்துவது?
 இன்று சிட்டுக்குருவிகள் தினம்! அன்னியப்பெரு நிறுவனங்களும், அன்னாந்துபார்க்கும் மால்களும், அந்நிய முதலீடுகளும் எங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல இந்த சின்னஞ்சிறு பறவைகளையும் காண்பதற்க்கரிதாய் செய்துவிட்டதே! என்ன செய்ய?
** இந்தியாவின் குருவி **
வாஸ்து பார்த்து
வீட்டில் மூலையில் கூடு கட்டினேன்!
வாஸ்து பார்த்து
என் கூட்டை கலைத்தனர்!
வீடு வேண்டாம் என்று காடு சென்றேன்!
கட்டில் வேண்டுமென்று
காட்டை அழித்ததில்
மீண்டும் கூட்டை இழந்தேன்!
எங்குமே வேண்டாம்
பறந்து கொண்டே இருக்கிறேன் என்றேன்!
நீங்கள் செல்போனில் பேசி வைத்து
டவர் வழியே என் மீது தாக்குதல் நடத்தினீர்கள்!
ஆடியோ வெளியீடு தொடங்கி
அஜித் குழந்தை வரை ட்விட்டரில் ட்ரெண்டாக்கும் நீங்கள்!
ட்விட்டர் குருவியாய் இந்த சிட்டுக்குருவியையும் பாருங்கள்!
இல்லையென்றால்
யாராவது எடுப்பார்கள் இன்னோரு ஆவணப்படம்
''இந்தியாவின் குருவி'' என்று!
ச.ஸ்ரீராம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக